மகிழ்ச்சி பொங்க பாடிடுவேன்
மகிபரே உம்மை துதித்திடுவேன்
துதிகன மகிமைக்கு பாத்திரர் நீரே
துதியினால் உம் ஆலயம் நிரப்பிடுவேன்
1. உயிர் உள்ளவரை உம்மை துதிப்பேன்
உயர்வு தாழ்விலும் உம்மை மகிழுவேன்
உத்தமர் நீர் என் துணையாய் நிற்பீர்
உத்தமப் பாதையில் நடத்துவீர்
2. என் நாவு உம்மை போற்றி துதிக்கும்
என் வாய் உம்மை பாடி மகிழும்
குழியில் கிடந்த என்னை கண்டீரே
கன்மலையில் என்னை நிறுத்தினீரே
3. இஸ்ரவேலின் துதி வாசஸ்தலமே
இரவும் பகலும் ஓயாது துதிப்பேன்
சேனைகளின் தேவன் பரிசுத்தரே
சேதமில்லா காப்பவர் நீர் தானே
4. உம் ஆலயம் மகிமையால் நிரப்பும்
உம் கிருபை அங்கே பெருகிடுமே
காலமெல்லாம் களிகூர போதுமே
காலையில் நித்தம் கிருபை தேடுவேன்
5. பாரெல்லாம் உம்மைப்பாடிப் போற்றுமே
பாரினில் உம் நாமமல்லாமல் வேறில்லையே
பரிசுத்தர் சபையில் எழுந்தருள்வீர்
பரலோக மகிமையால் நிரப்பிடுவீர்
HOME
More Songs